உங்கள் நினைவுகளைச் சுமந்து வாழ்கின்றோம்

இதயத்துடிப்பினிலே.....  

எங்களை விட்டு இறைவனடி சென்றீர்களே!

அதிர்ச்சியினால் என்ன செய்வதென்று அழுது துடித்தோம்

உம்மைக் காணாது நிலை தடுமாறி நின்றோம்

பாசமுள்ள பிள்ளைகளை நேர்வழிகாட்டி விருட்சமாக்கி

பரிதவிக்கவிட்டுச் சென்றாயோ!

குடும்பத்தின் வழிகாட்டியாகவும் பாசத்தின் ஒளி விளக்காகவும் இருந்த

நீங்கள் பிரிய மனம் வந்ததோ!

அன்பு மொழி பேசி எங்களை மகிழ வைப்பீர்களே!

உம் அன்பு மொழி எப்போது கேட்போம்!

உம் பிரிவால் முகம் வாடி நிற்கின்றோம்

உம் இறுதி மூச்சில் எத்தனை ஏக்கங்களுடன் சென்றிரோ!

ஆண்டுகள் சென்றாலும் எம் நெஞ்சை விட்டகலாது

உங்கள் நினைவுகளைச் சுமந்து வாழ்கின்றோம்

இக் கவிதை இந்திய அமைதி படையால் கடுமையாக தாக்கி  இறந்த என் அப்பாவுக்கு சமர்பிக்கிறேன்