கருணாநிதின் தமிழ் பணி அம்பலம்

பெரிதாக பார்க்க மேலுள்ள பந்தியில் கிளிக்  பண்ணவும் 
ராதிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இப் பெண்ணின் வயது 19 ஆகும். அவர் யாழில் உறவினர்களுடன் வசித்துவந்தார். இப் பெண்ணை முதலில் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்து பின்னர் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 3 கிழமைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட அப்பெண் சிகிச்சைக்காகச் சென்றபோது அவருக்கு எயிட்ஸ் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் மனம் உடைந்த நிலையில் இருந்ததோடு அவரை உறவினர்களும் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறிவிட்டனர். ஒரு ஏஜன்டின் கைகளில் மாட்டிக்கொண்ட அப்பெண்ணுக்கு பல கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது "துன்பத்தைத் தந்தவனுக்கே அதை திருப்பிக்கொடு" என்று கூறுவதுபோல உனக்கு இந்த வருத்தத்தை தந்தவர்களுக்கு நீ அதனைத் திருப்பிக்கொடு என்று சிலர் கூறி அவரை மூளைச் சலவை செய்துள்ளனர்.

அதனால் அப் பெண் இலங்கை இராணுவம் சென்றுவரும் விபச்சார விடுதி ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நோக்கம் முழுவதும் தனக்கு பரவிய நோயை எல்லா இராணுவத்துக்கும் பரப்புவது என்பது தான். ஒரு பழிவாங்கலைப் போல அப்பெண் தன்னை வருத்தி இச் செயலில் ஈடுபட்டுள்ளார். நாட்கள் கடந்தோடிய நிலையில் நோய் முற்றியிருக்கவேண்டுமே இதுவரை எயிட்ஸுக்கு மருந்து எடுக்கவில்லையா என நெருங்கிய தோழி ஒருவர் கேட்டபோது அப் பெண் திரும்பவும் வைத்தியசாலை சென்றுள்ளார். குறிப்பிட்ட அந்த சிங்கள வைத்தியர் அங்கு இல்லாத காரணத்தால் அவர் வேறு ஒரு வைத்தியரிடம் சிகிச்சை பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால் அப்பெண்ணுக்கு எயிட்ஸ் நோய் இருப்பதற்கான எந்த அறி குறியும் காணப்படாததால் சந்தேகமுற்ற மருத்துவர் அப்பெண்ணை மீண்டும் ரத்தப்பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

கிடைக்கப்பெற்ற பேறுகளால் அப்பெண் ஆடிப்போயுள்ளார். குறிப்பாகச் சொல்லப்போனால் இன்றுவரை அவருக்கு எயிட்ஸ் நோயின் தாக்கம் இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. முன்னர் அங்கே இருந்த சிங்கள டாக்டரின் பெயரும் தெரியாது, பரிசோதித்த டாக்டர் ஏன் தான் இருக்கும் உறவினர் வீட்டிற்கு தனக்கு எயிட்ஸ் நோய் இருப்பதாக அறிவித்தார் என்பது எல்லாம் அப் பெண்ணுக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது. தான் அனாதரவாக இருந்தபோது தன்னை அரவணைத்து புத்திசொல்வது போல பாழுங்கிணற்றில் தள்ளிய நபர்கள் மாயமாக மறைய. உயர் பாதுகாப்பு வலயத்திற்கு அருகில் இராணுவ உதவியோடு இயங்கும் அந்த விபச்சார விடுதியைக் காட்டிகொடுக்கவும் முடியாது இப் பெண் தத்தளித்துள்ளார். தற்போது அவர் இந்தியா சென்று அங்கே நிம்மதியாக வாழ யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் உதவி புரிந்துள்ளார்.

இதில் வேதனையான விடையம் என்னவென்றால் இந்த வங்கி ஊழியரும் ஒரு காலத்தில் இப் பெண்ணிடம் சென்றவராம். தமிழர் என்று நினைக்கவேண்டாம். அவர் ஒரு சிங்களவர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணை தற்செயலாகக் கண்ட அவர், இப் பெண் கூறிய சோகக்கதையை அரை குறையாக விளங்கிக்கொண்டு இந்த உதவியைச் செய்துள்ளார். சென்னை சென்றதும் பெண்கள் நல வாரியத் திட்டத்தின்கீழ் பாதிக்கப்பட்ட இப் பெண்ணுக்கு உதவுவதாக செல்வி ஜெயலலிதாவின் அரசு தெரிவித்துள்ளது பெரும் நம்பிக்கையை ஊட்டுவதாக உள்ளதாக அவர் அதிர்வு நிருபருக்குத் தெரிவித்துள்ளார்.  
நன்றி அதிர்வு