மிக அற்புதமாக காப்பாற்றப்பட்டேன்

மிக அற்புதமாக காப்பாற்றப்பட்டேன்

இலங்கை இராணுவம் தமிழ்   மக்கள் மீது பலவிதமான முறையில் இன அழிப்பை   மேற்கொண்டது யாவரும் அறிந்ததே.  அதில் ஒரு   புதிய விடயத்தை  இப்போது  பகிர்ந்து  கொள்கின்றேன். 1990 - 1995 ஆண்டுவரை யாழ்ப்பாணம் புலிகளின் ஆளுமைக்குட்பட்டு   இருந்தது.அப்போது நான் 5 ஆம் வகுப்பு கல்வி கற்றுக் கொண்டிருந்தேன்.  இலங்கை அரசாங்கத்தினால் மின்சார, பொருளாதாரத தடைகளையும் விதிக்கப்பட்டுருந்தது.  மாதம் ஒருமுறை இலங்கை  அரசாங்கத்தினால் அனுப்பப்படும் உணவே அனைவருக்கும்  பகிரப்படும்.     எனது பிறந்த நாளை விமர்சையாக  கொண்ட்டாட  எனது பெற்றோர்  முடிவு  செய்தனர்.     இவ்வளவு கஷ்டத்தின் மத்தியிலும் பலவிதமான  கேக்கு, இனிப்புப்  பண்டங்கள் என்பன செய்தார்கள்.  எனது பாடசாலைக்கும்  இனிப்புப் பண்டங்களுடன் அனுப்பி வைத்தார்கள்.  நானும்
மிக  சந்தோசத்துடன்  பாடசாலைக்குப்  போனேன்.  பாடசாலை ஆரம்பித்து 15 நிமிடங்களில் வானில் இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான இரண்டு விமானங்கள்  பாடசாலையை அண்டி வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.  இதனால் மாணவர்களும், ஆசிரிகளும் கால் போன போக்கில் ஓடினார்கள்.  நான் தனியே எங்கே ஓடுவது   என்று  தெரியாது அழுது கொண்டிருந்தேன். விமானத்திலிருந்து பாரிய  சத்தத்துடன்  ஒரு  குண்டு விழுந்த்தது. உடனே அருகிலுள்ள வீடுக்குள் ஒழித்துக் கொண்டேன்.  அங்கு யாரும் இருக்கவில்லை.  அடுத்த குண்டுச் சத்தம் என் நெஞ்சைப் பிளந்ததுடன் மிக அருகில் விழுவதுபோல் உணர்ந்தேன்.  எனவே என்ன நடந்தாலும் வீட்டிற்கு போவது என முடிவெடுத்தேன். வீட்டை நோக்கி ஓடினேன்.  நான் எனது வீட்டை நெருங்கிக் கொண்டிருக்கையில் நான் ஒருபோதும் <  பார்த்திராத ஒரு நபர் வெள்ளை ஆடை அணிந்து மிக அழகாக நின்றுகொண்டிருந்தார்.  அவர் வந்த வழியாலே திரும்பி ஓடு தம்பி எனக்  கூறினார்.  நான் எனக்கு அருகில் நின்றவரிடம் இவ்வழியால் போகவேண்டாமாம் எனக் கூறினேன்.  அவர் யார் உனக்கு சொன்னது இங்கு உன்னையும் என்னையும் தவிர யாருமேயில்லை.  நீ சின்னப் பெடியன் உனக்கு என்ன தெரியும் நீ பயத்தில் ஊளராதே என்னுடன் வா என்றார்.  நான் முடியாதெனக் கூறி வந்த  வழியால் திரும்பி ஓடிவிட்டேன்.  ஓடி சிறுது தூரத்தின்  பின்னர் ஒரு குண்டுச்  சத்தம் கேட்டது.  அந்த  மனிதர்  போன பாதையில் விழுந்தது.  அவர் இறந்துவிட்டார்.அன்று என்னை வழிநடத்தியவர் ஆண்டவராகிய ஜெசுவே
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்


ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்