சுமார் 7 வருடங்களாய் ஆபாச வெறிப்பிடித்து அலைந்த நான்

பிரித்தானியாவில் வாழும் பெண் ஒருவர் தான் ஆபாச படங்களுக்கு அடிமையானது குறித்து பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஓகோசா ஓவியன்ரியோபா(Oghosa Ovienrioba Age-22) என்ற தென் ஆப்பிரிக்க வம்சாவளி பெண் வசித்து வருகிறார்.

தற்போது கிறிஸ்துவராய் மாறியுள்ள இப்பெண், தான் இளமை காலத்தில் ஆபாச படங்களுக்கு அடிமையானது குறித்து யூடியூப்பில் பேட்டியளித்துள்ளார்.

அவர் பேசியதாவது, நான் 14 வயதிலிருந்தபோதே ஆபாச படங்களை பார்க்க தொடங்கிவிட்டேன்.

எப்போதும் என் அறையில் விளக்கை அணைத்து இருளில் ஆபாசத்தை ரசித்து வந்தேன்.

இவ்வாறு நான் இருந்ததால், எனக்கு பார்க்கும் நபர்கள் மீதெல்லாம் பாலியல் ஆசை ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் என் ஆசை எனது எல்லையை மீறி செல்லவும் ஆரம்பித்துவிட்டது. இதனால் நான் பெரும் அவதிக்குள்ளானேன்.

இதன்பின் இவ்விடயம் தொடர்பாக நான் என் தோழியிடம் பேசினேன். அவள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறுமாறு என்னிடம் கூறினாள்.

அதன்படியே மதம்மாறிய நான் பைபிளை படிக்க தொடங்கியது முதல், என்னிடம் இருந்த வக்கிர எண்ணங்கள் என்னை விட்டு விலகி சென்றது.

சுமார் 7 வருடங்களாய் ஆபாச வெறிப்பிடித்து அலைந்த நான், தற்போது முற்றிலுமாக மாறியதில் மகிழ்ச்சியடைகிறேன் என ஆனந்த கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார்.