நாம் பார்க்கும் இணைய தளம் பாதுகாப்பானதா என அறிய

நாம் பார்க்கும் இணைய தளம் பாதுகாப்பானதா என அறிய










பிரபல நிறுவனங்களின் இணைய தள முகவரிகளில் சிறிய மாற்றங்கள் செய்தும், அந்நிறுவனங்களின் இணைய தளங்களைப் போலவே பக்கங்களை வடிவமைத்தும், பல திருடர்கள் தங்கள் திருடும் புரோகிராம்களை நம் கணணிக்குள் அனுப்பி விடுகின்றனர்.



இந்த சூழ்நிலையில் ஓர் இணைய தளம் இது போல தீங்கு எதுவும் இல்லாததுதானா என்று கண்டறிந்து கூறும் சேவையினை சைமாண்டெக் நிறுவனம் இலவசமாக நமக்குத் தருகிறது.
இதற்கென http://safeweb.norton.com/ என்ற முகவரியில் தளம் ஒன்றை அமைத்துள்ளது. இதனைப் பயன்படுத்துவது மிக எளிது. இந்த தளம் சென்று நீங்கள் சோதனை செய்து பார்க்க விரும்பும் தள முகவரியினை அப்படியே கொப்பி செய்து அதற்கான இடத்தில் பேஸ்ட் செய்திடலாம் அல்லது நாமாக டைப் செய்து அமைக்கலாம். சோதனை செய்து முடிவுகளைக் காட்ட பொக்ஸ் அருகே உள்ள லென்ஸ் படத்தில் கிளிக் செய்தால் அல்லது என்டர் அழுத்தினால் சில நொடிகளில் சோதனை முடிந்து நமக்கு அந்த தளத்தின் பாதுகாப்பு தன்மை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.
 இந்த பாதுகாப்பு நிலை தகவல்கள் நான்கு வகைகளில் கிடைக்கின்றன. 
1) மிக மோச எச்சரிக்கை - சிகப்பு வண்ண பட்டன்.
2) எச்சரிக்கை - சிகப்பு வண்ண ஆச்சரியக் குறி. 
3) பாதுகாப்பானது - பச்சை நிற செக் குறியீடு. 
4) சோதனையிடப்படவில்லை - சாம்பல் வண்ணத்தில் கேள்விக் குறி.