உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை. இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.

நித்தியமான ஆயுள் காப்புறுதி

பெரும்பாலான வேளைகளில் நாம் பல வகையான காப்புறுதித்திட்டங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருந்தாலும் அவை என்ன என்று,
முக்கியமாக, அவை எதைப் பாதுகாக்கின்றன என்று, புரிந்துக்கொள்வது இல்லை. உண்மை என்னவெனில், இரு பிரதான வகை காப்புறுதிகள்உள்ளன. அவை, உங்களின் வாழ்க்கையில் வெவ்வேறு அம்சங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்

1) ஆயுள் காப்புறுதி

2) பொதுக் காப்புறுதி

 உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்படும் பண நெருக்கடியைத்தீர்ப்பதில் ஆயுள் காப்புறுதி உதவும். நீங்கள் அகால மரணமடைந்தால்
காப்புறுதிப் பணம் உங்கள் குடும்பத்தினருக்குத் தரப்படும். மற்றபடி நீங்கள் நிரந்தர அல்லது தற்காலிக செயலிழப்புக்கு ஆளானால் பாலிசிப்
பணம் உங்களிடம் வழங்கப்படும்.

நான் ஏன் ஆயுள் காப்புறுதியை வாங்க வேண்டும்?

1) நீங்கள் மரணமடைந்த பின்னரும் உங்கள் குடும்பத்துக்கு வருமானம் கிடைக்க இது வகை செய்யும்.

2) உங்கள் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கு இது உதவும்
ஓய்வுக்குப் பின்னரும் உங்களுக்கு நிலையான வருமானம் கிடைத்து வர இது நல்ல சேமிப்பு திட்டம்.

4)கடுமையான நோய் அல்லது விபத்து காரணமாக உங்களுக்கு ஏற்படக்கூடிய வருமானக் குறைச்சலை நிவர்த்தி செய்யும்.

என்ன கிறிஸ்தவ தளத்தில் காப்புறுதி யை பற்றி விளம்பரம் உள்ளது என்று யோசிகின்றிர்களா? காப்புறுதி யை பற்றி நமது அன்றாட வாழ்வில் அறிந்திருப்போம்.ஆனால் நாம் அறியாத ஒருவர் நாம் கேட்காமலே நம்மீது வைத்த ஆழமான காதலினால் தனது சொந்த இரத்தம் என்றும் பாராமல் உனக்காக தந்து உயிரையும் கொடுத்து உனக்கு வரும் சகல ஆபத்துகளையும் தானே ஏற்று சுமந்து தீர்த்தார்

உலகம் முடியும் வரை நிலைத்து நிற்க  கூடிய  நிலையான ஆயுள் காப்புறுதியை அன்று இஸ்ரவேலில் உள்ள கால்வாரிமலையில் தனது சொந்த இரத்தத்தை கிரயமாக கொடுத்து செய்து முடித்தார் நமது பரம தக்கப்னான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து  
நிலையான ஆயுள் காப்புறுதியினால் நாம் பெறும் நன்மைகளாவன  
நமக்கு பாவத்தில் இருந்து விடுதலை நோயில் இருந்து விடுதலை ஆயிரம் தலைமுறைக்கு தேவனின் இரக்கம் ஆபத்துகள் பயங்கரங்களில் இருந்து பாதுகாப்பு  உங்களது வலது புறமும் இடது புறமும் இரண்டு வானதூதரின் பாதுகாப்பு மொத்தத்தில் சகல ஆபத்துகள்  பயங்கரங்களில் இருந்து பாதுகாப்பு சகல கட்டுகளில் இருந்து விடுதலை      
இதுவே நித்திய நித்தியமான ஆயுள்  காப்புறுதி  இதுவே கிறிஸ்தவர்களால் இரட்சிப்பு என அழைக்கபடுகின்றது. நாம் அனைவரும் இந்த நித்திய நித்தியமான ஆயுள்  காப்புறுதியை செய்ய தவறி விடுகின்றோம் 

இந்த இரட்சிப்பை பெற நாம் என்ன செய்ய வேண்டும் ?
ஜேசு மீது விசுவாசம் கொண்டு ஏற்றுக் கொண்டால் போதும். அவர் சகலதையும் பார்த்து  கொள்வார் அத்துடன் உங்களுக்கு அருகில் உள்ள கிறிஸ்த தேவாலயத்துக்கு செல்லுங்கள் அவர்கள் உங்களை   இரட்சிப்பை நோக்கி வழிநடத்துவார்கள்.

மத்தேயு 6:20,21 

19 ,“உங்களுக்காக இப்பூமியில் செல்வம் சேர்த்து வைக்காதீர்கள். பூச்சிகளாலும் துருவாலும் பூமியிலுள்ள செல்வம் அழியும். மேலும் திருடர்கள் உங்கள் வீட்டை உடைத்து உங்கள் செல்வங்களைக் கொள்ளையடித்துப் போவார்கள். 
20 எனவே உங்கள் செல்வங்களைப் பரலோகத்தில் சேமியுங்கள். பூச்சிகளும் துருவும் அவற்றை அழிக்க இயலாது. பரலோகத்திலிருக்கும் செல்வத்தைத் திருடர்களும் திருட முடியாது. 
21 உங்கள் செல்வம் எங்கேயோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.


நன்றி படங்கள்  Catholic Pentecost Mission
Share:

Recent Posts

Popular Posts

Blog Archive

Follow by Email

Google+ Followers

Blog Archive

ஊக்கம் தருபவர்கள்