மகிந்தவும் இதுபோல நஞ்சு குடிப்பாரா ?

மகிந்தவும் இதுபோல நஞ்சு குடிப்பாரா ?

குரோவோஷியா நாட்டின் முன்னாள் ராணுவ ஜெனரல், நீதிமன்றில் நஞ்சை குடித்து இறந்த விடையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குரோவோஷியா- பொஸ்னியா ஆகிய இடங்களில், பல போர் குற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அன் நாட்டில் இலங்கை போல இன அழிப்பும் இடம்பெற்றது. இதனை முன் நின்று நடத்தியவர், சுலோபோடன் என்னும் ராணுவ ஜெனரல்.

72 வயதாகும் இவருக்கு எதிராக நெதர்லாந்தில் உள்ள ஹேக் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. போர் குற்றம் மற்றும் இன அழிப்பு தொடர்பாக இவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், இவருக்கு 20 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேன் முறையீடு செய்தார். அந்த விசாரணையின் இறுதி தீர்ப்பு நேற்று வெளியாக இருந்த வேளையில். கையில் சிறிய போத்தல் ஒன்றில் ஒரு வகையான திரவத்தோடு அவர் நீதிமன்றம் வந்திருந்தார்.

பலரும் அது ஏதோ குளிர்பாணம் என எண்ணி இருந்தார்கள். ஆனால் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும், நான் போர் குற்றவாளி அல்ல என்று கூறியவாறு  அவர் அதனை அருந்தி கீழே விழுந்தார். இதனை பல சர்வதேச TV க்கள் அப்படியே படம் பிடித்துள்ளார்கள். இன் நிலையில் இன்று அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹேக் நீதிமன்றத்தில் ,  பல வெளிநாட்டு தமிழ் அமைப்புகள் மகிந்தவுக்கு எதிராக வழக்கு தொடுக்க முனைப்பு காட்டி வருகிறது. இருப்பினும் இலங்கை இந்த சட்ட முறைமையில் கைச்சாத்திடவில்லை. இதனால் மகிந்தவை நீதிமன்றம் இழுப்பது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. இருப்பினும் ஒரு நாள் மகிந்தவுக்கும் இன் நிலை தான் தோன்றும்.