பிரபாகரன் உயிருடன்? சிவாஜிலிங்கம்

பிரபாகரன் உயிருடன்? சிவாஜிலிங்கம்

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்து அரசாங்க தரப்பினரால் காட்டப்பட்ட உடலம் தலைவர் பிரபாகரனுடையது இல்லை என பல முறை பகிரங்கமாக கூறியிருந்தேன்.இதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம்கொடுக்க நேரிட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர், “குறித்த விடயம் தொடர்பில் இது வரையில் ஏன் மரபணு சோதனை நடத்தவில்லை என அரசாங்கத்திடம் கோரியிருந்தேன். உடனடியாக செய்வதாக கூறியிருந்தார்கள்.
ஆனாலும், இது வரையில் மரபணு சோதனை நடத்தவில்லை. அத்துடன், மரணச் சான்றிதழ் கூட இன்று வரையிலும் வழங்கப்படவில்லை.
இன்று கேட்டாள் பிரபாகரனுடைய உடல் கடலில் வீசப்பட்டு விட்டது என்றெல்லாம் கூறுகின்றார்கள்.
ஆகையினால் அவர் உயிரிழந்து விட்டார் என்பதை நிரூப்பிக்கும் வகையிலான ஆதரபூர்வமான தகவல் ஏதும் அரசாங்க தரப்பிடம் இல்லை” என அவர் கூறியிருந்தார்.
இதன் போது “விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்றால் அது எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு தெரிந்திருக்க கூடும்” என்று அரத்தம் கொள்ளலாமா? என அந்த ஊடகம் கேள்வியெழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்து பேசிய அவர், “விடுலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எனக்கு சொல்லாமலே ஏன் அவர் உயிருடன் இருக்க கூடாது? எனக்கு அவர் சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது.
சிங்கள மக்களை பொருத்த மட்டில் பிரபாகரன் ஒரு குற்றவாளி. அவருக்கு 200 ஆண்டுகள் சிறைதண்டனை கூட விதிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் நினைத்திருந்தால் அவரின் உடலை கொழும்பில் கொண்டு வந்து காட்சிப்படுத்தியிருக்க முடியும். ஆனாலும் ஏன் அவ்வாறு செய்யவில்லை” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.