கனடா பள்ளிகளில் தமிழ் மொழி – இரண்டாம் மொழியாக படிக்கலாம்!

கனடா பள்ளிகளில் தமிழ் மொழி – இரண்டாம் மொழியாக படிக்கலாம்!

தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், தமிழீழத்தில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது. தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.

அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின.இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள் . தென்னாபிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட் டொபாகோ போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.

புலம் பெயர்ந்த தமிழர்களின் பெரு முயற்சியினால் தற்போது ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பள்ளிகளில் கற்பிக்கப்படுகின்றது.