தமிழர்களுக்கென்று ஒரு நாடே இருந்தது தெரியுமா..?

தமிழர்களுக்கென்று ஒரு நாடே இருந்தது தெரியுமா..?

தமிழகத்தைப் போல் இலங்கையிலும் எண்ணற்ற தமிழ் இலக்கியங்கள் இயற்றப் பட்டுள்ளன. இலங்கையில் உள்ள தமிழ் இலக்கியங்களை மூன்று பிரிவுகளாகக் கருதுகிறார்கள் நமது தமிழ் அறிஞர்கள்.

இலங்கையில் தமிழர்கள் வாழத் துவங்கிய காலத்தில் இருந்து கி.பி. 17-ஆம் நூற்றாண்டு வரை ஒரு பிரிவு, 17-ம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் மற்றும் புராணங்கள் இரண்டாம் பிரிவு, விடுதலைக் காலம் என்ற மூன்றாம் பிரிவும் இருக்கிறது.

இவையெல்லாம் அந்தந்த கால கட்டத்தில் உருவாக்கப் பட்ட, இலக்கிய, புராணப் பொக்கிஷங்கள். துவக்க கால இலக்கியங்களைக் குறித்துப் பார்க்கும் போது, அது குறித்து குறைவான தகவல்கள் தான் கிடைத்துள்ளன.

சங்க காலத்து இலங்கைப் புலவர், ஈழத்துப் பூதன் தேவனார் என்பவர் எழுதிய இலக்கியங்கள் மிகவும் தொன்மையானதாகவும், புகழ் பெற்றவையாகவும் இருந்திருக்கின்றன. அப்போது, இலங்கை தனி நாடாகப் பிரிக்கப் படாமல், தமிழகத்தின் தென் கிழக்குப் பகுதியாகவே இருந்தது.
இன்று தனி நாடாக இருக்கும் இலங்கை அன்று தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்து சங்க இலக்கியங்களை போலவே அங்கும் தமிழ் இலக்கியத்திற்கு என்று தனி வரலாறே இருக்கிறது.
உலகம் எங்கிலும், நமது தமிழ் இலக்கியங்கள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
 
இவர் எழுதிய நூல்களைப் பற்றி, தொன்மையான இலங்கைக் கல்வெட்டில் வெண்பா அமைப்புடன் கூடிய பாடல் ஒன்று கிடைத்துள்ளது.
இதன் பின்னர் கி.பி. 13-ம் நூற்றாண்டில், இலங்கையை ஆண்ட மூன்றாம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் காலத்தில், இலங்கையில் உருவாக்கப் பட்ட “சரசோதி மாலை” என்ற நூலின் ஏடு கிடைத்திருக்கிறது. இதனைக் கொண்டு, இலங்கையில் உருவான இலக்கியங்ளைப் பற்றி நமக்கு தகவல் கிடைக்கின்றன.

இதனை அடுத்து போர்ச்சுக்கீசியாகளின் ஆட்சிக் காலத்தில்; கி.பி.1505-லிருந்து 1658 ஆண்டு வரையிலும், இவர்களை அடுத்து இலங்கையில் ஆட்சி புரிந்த ஒல்லாந்தியரின் ஆட்சிக் காலமான, கி.பி. 1658-லிருந்து 1796 வரையிலும்,  மூன்றாம் காலமான விடுதலைக் காலம் என்று குறிப்பிடக் கூடிய காலமான 1796-லிருந்து 1948-வரையிலான கால கட்டத்திலும், பல் வேறு அற்புதமான இலக்கியங்கள் படைக்கப் பட்டுள்ளன.
 
இவர்களில் ஆங்கிலேயர்களும், பல சைவ சமய அறிஞர்களும், ஏராளமான தமிழ்ப் பணி ஆற்றியுள்ளனர். இந்த மூன்று வகையான கால கட்டங்களில், ஏகப்பட்ட இலங்கையின் தலப் புராணங்களும், சிற்றிலக்கியங்களும், கிறிஸ்துவ இலக்கியங்களும் தோன்றின.

ஆங்கில மொழியின் வாயிலாகவும், தமிழ் மொழியின் பெருமையைப் பிறர் அறியச் செய்திருக்கிறார்கள். இது வரையில், சுமார் 40 புராணங்கள் இலங்கையில் உருவாக்கப் பட்டுள்ளன. இவைகளில் பெரும்பாலானவை தல புராணங்கள் தான்.

இலங்கை மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கியமான தலங்களைப் பற்றிய புராண நூல்கள் இவை. தட்சண கைலாச புராணம், திருக்கரை புராணம், திரிகோணாசல புராணம், கதிர்காம புராணம், திருக்கேதீச்சரப் புராணம், நகுலாசல புராணம், போன்ற சில புராணங்கள், தலப்புராணங்களாக உள்ளன. இது தவிர, சிவராத்திரி புராணம், சீமந்தனி புராணம், விநாயக கட்டி புராணம் போன்றவை தெய்வங்களின் மேன்மை பற்றியும், அவர்களது புராணங்களைப் பற்றியும், பக்தி மார்க்கத்தைப் பற்றி குறிப்பிடப் பட்டிருக்கிறது.
 
இவையெல்லாம் மரபு வழிப் புராணங்கள் எனப்படுகின்றன. இந்த மரபு வழியிலிருந்து மாறுபட்டு மூன்று புராணங்கள் இயற்றப் பட்டுள்ளன. இலங்கையிலும், தமிழகத்தில் பெருமளவு காணப்படும் பனைமரத்தின் பெருமைகளைப் பற்றியும், இந்த மரத்தில் ஏறுவதைத் தொழிலாகக் கொண்டு வாழ்பவர்களைப் பற்றியும், காசிநாதப் புலவரின் தலப் புராணம் விரிவாகக் குறிப்பிடுகிறது.

இலங்கையில் இயற்றப் பட்ட புராணங்களில் மிக வித்தியாசமானது, ராமலிங்கம் என்ற புலவர் எழுதிய கோட்டுப் புராணம் என்று கருதப் படுகிறது. இதில் இறைவனின் இயல்பு நிலை, மனிதனின் வாழ்வியல் நிலையினைப் பற்றியும், புலவர் அவரது கண்ணோட்டத்தில் சுவைபட எழுதியிருக்கிறார்.

மூன்றாவதாக உள்ள சனகி புராணத்தை எழுதியவர், வண்ணார் பண்ணை சுப்பையா என்பவர். இவர் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த சனகி என்ற உண்மையான தேவதாசியை மையமாகக் கொண்டு சனகி புராணத்தை எழுதியிருக்கிறார்.

இவருடைய சம காலத்தில் வாழ்ந்த சனகியைப் பற்றியும், தேவதாசிகளின் பிரச்சினைகளைப் பற்றியும் விரிவாக, தனது சனகி இலக்கியத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
 
இலங்கையின் தமிழ் இலக்கியங்களும் நெடிய வரலாற்றைக் கொண்ட பெருமை உடையவை.
இந்த இலக்கியங்கள் எல்லாம், நம் தமிழர்களுக்கு இன்னும் பெருமை சேர்ப்பதாகத் தான் இருக்கிறது.
உலகெங்கும் விரவி இருந்த இனம் இன்று ஒரு கோடியில் சுருங்கி கிடக்கிறது. இங்கிருந்த அறிவியல் எல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட்டு இன்று மேலை நாடுகளில் மிளிர்கிறது.
இதுவா நம் அடையாளம்..?